Monday, December 18, 2017

பிச்சை



கல்லறைக்கும் எனக்கும்
இடையில் நின்ற
சிலவற்றில் இந்த
சில்லறையும் ஒன்று..
கைமாறும் காசுக்கு
என்ன
கைமாறு செய்யப்போகிறோம்?
சதையில் வந்து சேர்ந்தால்
சத்தம் வராது என
கையில் வாங்காமல்
பாத்திரத்தில் வாங்கி
வீழ்ந்த காசையும்
தாழ்மையான நன்றி
சொல்ல வைத்தோம்
மானம் இழந்து தான்
தானம் கேட்கிறோம்,
தந்த காசால்
உயிர் போன பின்னும்
வயிர்மட்டும் வாழ்கின்றது
இல்லாமையால் வந்த
இயலாமையைக் கண்டு
வேண்டுமானால்
இதயம் இருகி விடுங்கள்,
ஆனால்
இயலாமையால் வந்த
இல்லாமையை கண்டு
இதயம் இளகி விடுங்கள்.

© Ravishankar Palanivelu, December 17, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section. This was first posted in the FB group "Vaanga Pesalam" which solicited poems for the photo on the top.