இருந்தும் இறந்தேன்
பழகியது
அழிந்தது
கற்றது
கரைந்தது
அறிவது
அரிதானது
கூடு மட்டும்
தோய்ந்து
நின்றது
கூடவே
வந்தவை
தேய்ந்து
போயின
என்னை
மறந்ததை
மறுக்கவில்லை,
உன்னையே
உணராததை தான்
ஏற்க
இயலவில்லை
நதியின்
இரு கரைகளாய்
இருக்கும் போதே
பிரிந்தோம்
தூண்டில்
மீனாய்
துண்டிப்பால்
தண்டனை
சிரிப்பை மறவாதது
சிறப்பு
அணைப்பை இன்னும்
உணர்வது
உன்னதம்
இப்படி
சின்ன சின்ன
செயல்கள் எனக்கு
சொன்ன செய்தி
என்ன தெரியுமா?
இருக்கும்போதே நீ
இறக்கவில்லை,
மாறாக
கற்றதை எல்லாம்
முற்றும்
இறக்கி வைத்துவிட்டு
நீ
மீண்டும் ஒரு
அழகிய குழந்தையாய்
ஆகிவிட்டாய் என்பதே
------
English translation by Kiru Pakkirasamy
Forgotten were all that was learnt
Lost forever are all the practiced art
Comprehension became tough
Understanding well not enough
The bones have grown tired
And the muscles atrophied
It doesn’t hurt that you forgot me
Sad you cant find yourself in the memory sea
Happy to see you still have that smile
And your loving hug goes a long mile
The banks of a river never part
But Dementia has torn us apart
A life long relationship severed
As the fish on a hook suffered
Lesson for me is you are not lost in the wild
Losing the worldly deceits have turned you back into a child