அது
இரவின் அடக்கம்
பகலின் தொடக்கம்
பௌர்ணமி ஓர் விளிம்பு,
அதன்
வளர்ச்சியின் இறுதியில்
தேய்மானம் உறுதி
மேகம் ஓர் விளிம்பு,
அரும்பியது
வெந்திட்ட கடலுக்கும்
வந்துவிடும் மழைக்கிடையில்
அலை ஓர் விளிம்பு,
அது
மணற்கரைக்கு முன்பே
கடலில் நீர்க்கரை
நீர்க்குமிழி ஓர் விளிம்பு,
அங்கு
சிறையான காற்றுக்கு
விரைவில் விடுதலை
இசை ஓர் விளிம்பு,
அது
மௌனத்திற்கு பின்
வார்த்தைக்கு முன்
வாசல் ஓர் விளிம்பு,
அதன்
உள்ளே விலாசம்
வெளியே விசாலம்
நாணம் ஓர் விளிம்பு,
அங்கு
சபலத்தின் பெருக்கை
நாகரீகம் அணைக்கட்டும்
துருதுருப்பு ஓர் விளிம்பு,
அமர்ந்திருக்கும்
அணலான அண்ணத்திற்கும்
அடங்காத பசிக்கிடையில்
அழுகை ஓர் விளிம்பு,
அத்தாட்சி
முயற்சி நின்றது
தோல்வி வென்றது
கண்ணீர், முத்தம், புன்னகை
அனைத்துமே ஓர் விளிம்பு,
அவை
அளவில்லா உணர்வுகளின்
வார்த்தையில்லா பிள்ளையார்சுழிகள்
பாகுபாடு ஓர் விளிம்பு,
அதனால்
வெறுப்பு கரையேறியது
தீண்டாமையெனும் கறையானது
தூது ஓர் விளிம்பு,
அது
போரை போக்க
அமைதி அமைய
தலைகுளியல் ஓர் விளிம்பு,
அங்கு
குழுமிய குழப்பம்
எழும் யோசனையாய்
மன்னிப்பு ஓர் விளிம்பு,
அப்பொழுது
தவறை ஏற்க
தற்கொலையாகும் தற்பெருமை
மரணம் ஓர் விளிம்பு,
அதனால்
நிகழ்வுகள் நிற்கும்
நினைவுகளில் மட்டும்
விளிம்பிலும் விளைச்சலுண்டு
விளம்பிட விழைகிறேன்:
மலையோ மடுவோ
கடலோ விண்வெளியோ
வாயடைய வைக்கும்
வாழ்க்கை தருணமோ
விளிம்புக்கு செல்லும்
எல்லா மனிதனுக்கும்
தானாய் தவறாமல்
ஞானம் வரும்.
English Translation by Kirubakaran Pakkirisamy
English Translation by Kirubakaran Pakkirisamy
On the Edge of Enlightenment
------------------------------------------
Dawn is on the edge
On the edge of
Last night’s death
And this morn’s birth
The New Moon is on the edge
On the edge of
Its maximum waxing
And the start of it’s waning
The cloud is on the edge
One the edge of
The ocean boiling over
And coming down as shower
The waves are on the edge
One the edge of
The seas content
And the sandy beach’s extent
The beautiful bubble is on the edge
One the edge of
The glassy prison wall
And the air inside it all
The doorstep is on the step
One the edge of
The cozy indoors
And the vast outdoors
The coy smile of hers is on the edge
On the edge of
The uncontrollable desire
And the needed decent behavior
That cry is on the edge
On the edge of
Beaten effort
And the victory lost
That kiss or cry is on the edge
On the edge of
Uncontrollable emotions
And the beginning of new sensations
Discrimination is on the edge
On the edge of
Hate’s defeat
And slavery’s sealed fate
Diplomacy is on the edge
On the edge of
The war’s defeat
And Peace’s new date
The refreshing bath shower is on the edge
On the edge of
The dissolving last night’s confusion
And the new morning resolution
‘
The apology is on the edge
On the edge of
Your ego’s suicide
For the wrongs that preceded
There’s light on the edge
Whether on the end of the mountain
Or the boundary of the ocean
Whether its a life’s challenge
Or death near the range
Whoever pushes themselves to the edge
There is light and enlightenment ...that’s life’s pledge
Image of the cliff shared from https://pixabay.com without violating copyrights rules as per CC0 Creative Commons usage guidelines (https://pixabay.com/en/service/terms/#usage).
© Ravishankar Palanivelu, March 4, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.
© Ravishankar Palanivelu, March 4, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.