Friday, April 20, 2018

சிதைக்கப்பட்ட சிறுமி

வண்டு கூட
மொட்டுக்களை எப்பவுமே
மொய்க்காதே,
பூசைக்கு கூட
பூத்த பூக்களையே
கொய்வார்களே,
சிறுமியை சிதைக்கும்
பொறுக்கிகள் ஏன்
வாய்த்தார்களோ?

வேலியே இந்த 
வேலையை செய்தது
கேவலமே,
வளர்ந்தவர்களே குழந்தையை
வதைத்து கொன்றது 
வஞ்சகமே

பிஞ்சு உள்ளத்தை
பிச்சிப் போட்ட
பரதேசிகளுக்கு போய்
அரசியல்வாதிகள் சிலர்
வக்காலத்து வாங்குவது
எக்காலத்திலும் என்னால் 
ஏற்க இயலவில்லை,
தன்மதகாரர் என்பதற்காக
தனமானம் இல்லாமல்
சப்பை கட்டுவோரை
சபிக்கவே தோன்றுகிறது

மதத்திற்கா இத்தனை
மதமை பதர்களே?
சதிக்கு ஏதடா
விதிவிலக்கு?

மாடு மேய்த்தவளை
மேய்ந்து மாய்த்த
கயவர்களே, உங்களை
கைது பண்ணலாகாது,
கைமா தான்
கையோடு செய்திடனும்

குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்ற
இந்து மதத்தை
நிந்தித்த நயவஞ்ச்சகர்களே
உங்கள் கொடுமைக்கு 
இனிமேல் தான்
தண்டனையை நாங்கள்
கண்டுபிடிக்க வேண்டும் 

அவள் சாகும்
அவலம் நேரும்
முன்னரே நீங்கள் 
மூவரும் இறந்தீர்கள்,
இதயமே இல்லாததால்

நேரிட்டு ஒருவேளை 
நீங்கள் வந்திருந்தால்
அண்ணா, மாமா
அய்யா என்றள்ளவா
அழைத்திருப்பாள்?
அவளைப் போய்
சாவடித்த பாவிகளே

அவளின் பயத்திற்கு
வலிக்கு கூட
வலித்திற்கும்
கண்ணீர் கூட
ஆவியாயிருக்கும்

பகையால் அவளை
பகடை காயாக்கினீர்களே
வேற்றுமை உணர்வால்
வேங்கை ஆனீர்களே
கொன்னதை தவிர 
என்னத்தை கண்டீர்கள்?

அவளை காக்காத
அரசாங்கம் இனியாவது
சேதி அனுப்ப 
சேதம் செய்தவர்களை
கைது செய்து
எல்லா மதவாதிகளையும்
எச்சரிக்க வேண்டும் 
அந்த சிறுமிக்கு
இருக்கும் போது
கிடைக்காத நியாயம்
இறந்த பிறகாவது
பிறக்க வேண்டும்.


I wrote this Tamil poem after being disgusted about the rape and killing of an 8-year-old young Muslim nomadic girl in the Jammu/Kashmir region of India. How can one tolerate such an atrocity? I hope no one is trying to justify this in any way. No eye for an eye please and no bias due to religion or party. There should be no debate, simply condemnation. We should never tolerate such actions in a civilized society. Certain redlines should not be crossed. I am ashamed.

© Ravishankar Palanivelu, April 20, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section

Tuesday, April 17, 2018

உன்னத வாழ்க்கை

கண்ணில்  தெரிவது
அம்பா?
அன்பா?

நெஞ்சில் வருவது
நெருப்பா?
நெருக்கமா?

யாசித்தவர்க்கு தருவது
உதாசீனமா?
உதவியா?

அடுத்தவரின் நல்லதை
சுருட்டினீர்களா?
சுட்டிக்காட்டினீர்களா?

நல்ல யோசனைகளை
பதுக்கினாயா?
பகிர்ந்தாயா?

கசிந்த கண்ணீரை
தொடுத்தாயா?
துடைத்தாயா?

விடா முயற்சிகள்
கருகியதா?
கருவானதா?

நன்றி சொல்ல
மறந்தாயா?
முனைந்தாயா?

சரித்திரத்தின் பாடங்களை
அலட்டசியப்படுத்தினாயா?
அசைப்போட்டாயா?

இயற்கையின் அழகு
ஒன்றுமில்லாததா?
ஒப்பில்லாததா?

சுற்றுபுறச் சூழலை
காயப்படுத்தினாயா?
காப்பாற்றினாயா?

அடுக்காத அநீதிகளை
இழைத்தாயா?
இழித்தாயா?

வேற்றாரிடம் கொண்டது
அந்நியமா?
அன்யோன்யமா?

நம்மையும் மிஞ்சியவர்கள்
அற்பமா?
அற்புதமா?

வேரறுக்கும் வேற்றுமையை
கொண்டாயா?
கொன்றாயா?

பிறரின் பாராட்டுக்களை
குறைத்தாயா?
குவித்தாயா?

தீங்கு செய்தவர்களை
மன்றாடினாயா?
மன்னித்தாயா?

புறம் பேசுவதை
நிகழ்த்தினாயா?
நிறுத்தினாயா?

உன்னத வாழ்க்கை
சிக்கலா?
சுலபமா?

மேலோங்க மேலுள்ள
இரண்டாவதிலேயே
முதலீடுயிடு!


© Ravishankar Palanivelu, April 17, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Tuesday, April 10, 2018

பனிமழை; Translated version in English: The Perfect rain


மல்லிகை மொட்டுக்கள்
வெள்ளை மணலான
கொள்ளை அழகை
சொல்லி மாளாது,
புள்ளிகளே தானாய்
துள்ளி இறங்கி
கோலமான அதிசயத்தை
விளக்க இயலாது

தள்ளி நிற்பதை
தள்ளி போடு,
நெருப்பா இது 
அருகில் அமர்ந்திடு,
வெந்தா விடும் 
வந்து எடு

பனி மழையின்
தனித்துவம் என்ன?
உறைந்து போயினும்
குறைந்து போகவில்லை
மாறுபாடு இல்லையினும்
ஈடுபாடு குறையவில்லை

பனி துளியை
பண்ணிய உளியை
பார்க்க இயலாவிட்டாலும்
பணிந்து விட்டேன்,
அமைதிக்கு அத்தாட்சியாய்
வெள்ளைப் பூக்கள்
குவிந்ததற்கு தலை
குனிந்து விட்டேன்

மேலே இடமின்றி 
மேகங்கள் எல்லாம்
தரையில் இன்று
கரை ஏறியது

இலைகளை எல்லாம்
தொலைத்து விட்டு
மரங்கள் தானே
விதவை ஆயின,
பூமி ஏன்
பூண்டது வெள்ளாடை?

வரப் போகிறது
இளவேனில் காலம்
இல்லை எனவில்லை
இப்பொழுதே அதை
வரவேற்க யார்
வெள்ளையடித்து வைத்தது?

வெள்ளை மகரந்தங்களை
அள்ளி வந்து
பூமிப் பூவில்
மகரந்தச் சேர்க்கை
மகத்துவத்தை செய்த
வண்டுக்களை கொஞ்சம்
கண்டுப் பிடியுங்கள்,
தேனீக்கள் தென்பட்டால்
தேடுகிறேனென்று தெரிவியுங்கள் 

குழந்தையின் உள்ளங்கை,
உழவரின் உழைப்பு,
தன்னலமற்ற தாய்மை,
கரம் கறக்காத
கன்று மட்டும்
பசிக்கு பருகிய 
பசும் பால்,
இத்தனை இருந்தும்
உன் தூய்மைக்கு
உண்மையிலேயே உள்ளதா 
உகந்த உவமை?

மழையிலும் ஒரு
பிழை உண்டு;
நனைப்பதால் தெறிப்பதால் 
அனைவரும் ஒதுங்குகிறோம்
ஆனால் நீயோ
மெதுவான மழையாக
ஏதுவாய் இறங்கியதால்
இதமாக இருக்கிறாய்,
குளிருக்காக பூமியின்
குடையான மரங்களில்
வலியவே வந்தாலும்
வலிக்காமல்  வடித்ததால்
பதமாக தெரிகிறாய்.

English Translation by Kirubakaran Pakkirisamy

The Perfect Rain
----------------------

White cherry blossoms on ground
Many a majestic little white mound
White dots like in a puzzle
Turns itself into a painting with no tussle

No need to maintain that distance
Looks like white hot fire in an instance
But it is not, grab a seat and touch it
It is soft and cool, come down and sit

Even when frozen to death
Comes back to life in stealth
Thats the beauty of snow
It puts on a great white show

Who sculpted the snow flake grand
In respect before the maker I stand
White flowers herald peace
I bow my head before the soft seas

Gliding clouds seem to have run out of space in the sky
They have touched down on land without being shy

Why does the Earth don the doctors white suit over
May be to fix the trees that lost their leaves in the Fall fever

Spring is just  around the corner quite
Who painted it all white to welcome right

I search for the bees that brought the white pollen
To cover the flower of an Earth well swollen
If such bees do exist, let them know
I want to know the secret of the snow


The soft white of a baby’s palm
The hard work of the peasant in the farm
The cows milk for the calf with love so warm
All these vie in purity for your snow white charm

Rain is so imperfect
Its uncomfortably like sweat
You are a gentle rain
That does not need to drain
You cover the trees gently
You embrace the land completely
You are the heaven sent water
To quench our thirst with solid matter

Video recording of snowfall in NJ on March 18, 2018 by Sudhagar Shanmugasigamani.

© Ravishankar Palanivelu, April 10, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Monday, April 2, 2018

பள்ளிப்பருவம்


பள்ளிப்பருவத்தின் மேலேன்
கொள்ளை ஆசை?

பள்ளிப்பருவம்,
உருகாத பனி
அழுகாத கனி
அடங்காத அக்னி
காயாத மருதாணி
அதுபோல வருமாஇனி?

பள்ளிப்பருவம்,
ஓயாத அலை
குலையாத சிலை
பொங்காத உலை
உடையாத குவளை
ஈடு இணை
இதற்கு இல்லை!

பள்ளிப்பருவம்,
இறக்கும் வரைக்கும்
இருக்கும் இறுக்கம்
இறந்த பின்பே
ரிக்கும் ஞாபகம்

கரிசல் காட்டில்
கரிசன மழையால்
தரித்த பூவாய்,
பள்ளிப் பருவத்தை
நினைத்த போதெல்லாம்
தானாக தோன்றின
ஞாபக மலர்கள்

கடலை கூட
கடந்துப் போயினும்
கடந்தவை எங்களில்
மடியவே இல்லை,
கடைந்த வெண்ணையாய்
தடையின்றி தோன்றியது
தெளிந்த முத்தாய்
வெளியே வந்தது

பள்ளிப் பருவம்
துல்லியமாய் நின்றதும்
திரும்பிப் பார்த்தபோது
விரும்பியே விட்டதும்
எதனால்?
முதல் மழையால்
மட்டுமே வரும்
மண் வாசணை;
அதுப் போல
அநுபவங்கள் அனைத்திற்கும்
பிள்ளையார் சுழியிட்டது
பள்ளிப்பருவம் என்பதால்!

© Ravishankar Palanivelu, April 2, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.