வண்டு கூட
மொட்டுக்களை எப்பவுமே
மொய்க்காதே,
பூசைக்கு கூட
பூத்த பூக்களையே
கொய்வார்களே,
சிறுமியை சிதைக்கும்
பொறுக்கிகள் ஏன்
வாய்த்தார்களோ?
வேலியே இந்த
வேலையை செய்தது
கேவலமே,
வளர்ந்தவர்களே குழந்தையை
வதைத்து கொன்றது
வஞ்சகமே
பிஞ்சு உள்ளத்தை
பிச்சிப் போட்ட
பரதேசிகளுக்கு போய்
அரசியல்வாதிகள் சிலர்
வக்காலத்து வாங்குவது
எக்காலத்திலும் என்னால்
ஏற்க இயலவில்லை,
தன்மதகாரர் என்பதற்காக
தனமானம் இல்லாமல்
சப்பை கட்டுவோரை
சபிக்கவே தோன்றுகிறது
சபிக்கவே தோன்றுகிறது
மதத்திற்கா இத்தனை
மதமை பதர்களே?
சதிக்கு ஏதடா
விதிவிலக்கு?
மாடு மேய்த்தவளை
மேய்ந்து மாய்த்த
கயவர்களே, உங்களை
கைது பண்ணலாகாது,
கைமா தான்
கையோடு செய்திடனும்
குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்ற
இந்து மதத்தை
நிந்தித்த நயவஞ்ச்சகர்களே
உங்கள் கொடுமைக்கு
இனிமேல் தான்
தண்டனையை நாங்கள்
கண்டுபிடிக்க வேண்டும்
அவள் சாகும்
அவலம் நேரும்
முன்னரே நீங்கள்
மூவரும் இறந்தீர்கள்,
இதயமே இல்லாததால்
நேரிட்டு ஒருவேளை
நீங்கள் வந்திருந்தால்
அண்ணா, மாமா
அய்யா என்றள்ளவா
அழைத்திருப்பாள்?
அவளைப் போய்
சாவடித்த பாவிகளே
அவளின் பயத்திற்கு
வலிக்கு கூட
வலித்திற்கும்
கண்ணீர் கூட
ஆவியாயிருக்கும்
பகையால் அவளை
பகடை காயாக்கினீர்களே
வேற்றுமை உணர்வால்
வேங்கை ஆனீர்களே
கொன்னதை தவிர
என்னத்தை கண்டீர்கள்?
அவளை காக்காத
அரசாங்கம் இனியாவது
சேதி அனுப்ப
சேதம் செய்தவர்களை
கைது செய்து
எல்லா மதவாதிகளையும்
எச்சரிக்க வேண்டும்
அந்த சிறுமிக்கு
இருக்கும் போது
கிடைக்காத நியாயம்
இறந்த பிறகாவது
பிறக்க வேண்டும்.
I wrote this Tamil poem after being disgusted about the rape and killing of an 8-year-old young Muslim nomadic girl in the Jammu/Kashmir region of India. How can one tolerate such an atrocity? I hope no one is trying to justify this in any way. No eye for an eye please and no bias due to religion or party. There should be no debate, simply condemnation. We should never tolerate such actions in a civilized society. Certain redlines should not be crossed. I am ashamed.
© Ravishankar Palanivelu, April 20, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section

No comments:
Post a Comment