Sunday, March 17, 2019

யார் குருடர்கள்?; Translated version in English: Blind Superiority


நீங்களோ பார்த்து விட்டு 
உணர்வீர்கள்,
நாங்களோ
உணர்ந்து விட்டு 
பார்க்கிறோம்

வானவில்லின் வர்ணங்களை
கண்டதில்லை நாங்கள்,
ஆனால்
பார்த்து
பாகுப்படுத்தும்
பழக்கம் இல்லாததால் 
நேர் கொள்ளும் 
அனைத்திலும் உள்ள
சிறப்பை
சிபாரிசு இல்லாமல்
குறிப்பறியும்
பழக்கம் எங்கள் 
வழக்கம்

ஐம்புலன்களில் 
நான்கை மட்டுமே கொண்டு 
நாலையும்
நாளும் 
நாங்கள்
தெரிந்துக் கொள்கிறோம்,
எனவே
குருட்டு தைரியம் என்று
ஒரு போதும்
உரைக்காதீர்

கண் இருந்தும்
பார்வை இல்லை,
ஆனால்
கண்ணார் போடும் 
கண்ணியமில்லா பழக்கமும்
கண்மூடித்தனமும்
கண்டிப்பாய் இல்லை

பார்த்து பழகி 
வேரூன்றிய 
காதலுக்கு 
கண்ணில்லை என்று
சமத்துவம் 
பேசும் நீங்கள்,
கண்ணில்லாமலேயே
கொண்ட 
எங்கள் காதல்
உன்னதமானது
என்ற
மகத்துவம்
அறிவீர்களா நீங்கள்?

எங்கள் காதல்
பார்க்காமல் வந்ததால்
வேர்விட்டு நீடிக்கிறது,
அதனால்
முதுமை வந்தபின்னும்
பழமை ஆவதில்லை

இருளின் 
பொருள் 
ஒளியினால்  
வெளிப் பட்டது,
ஒளி எங்களிடமிருந்து
ஒளிந்துக்கொண்டதால்
எங்களுக்கு
இருட்டு ஒரு
பொருட்டே
இல்லை

நீங்கள் கனவைப் பார்ப்பது
நாங்கள் நிகழ்வைப் உணர்வது போல,
எண்ணில்லா வித்தியாசம்;
நாங்கள் கனவைப் பார்ப்பது
எங்கள் நிகழ்வைப் உணர்வது போல,
என்ன உள்ளது வித்தியாசம்?

கவனம் எங்கள்
கவசம்;
நிதானம் எங்கள்
சாதனம்;
ஊன்றுகோல் எங்கள்
கண்;
எனவே 
எங்கள் வாழ்கையில்
குறை உண்டு
குறைவு இல்லை

எங்களிடம் இத்தனை
உயர்வு இருப்பினும் 
வியப்பு வரத்தானே
வாய்ப்பு, பின்னர் 
பரிதாபம் எப்படி
தவறாமல் வந்தது?
எங்களை இனி
கண்களால் 
காணாதீர்கள்,
சிந்தையால் மட்டுமே
வந்து
சந்தியுங்கள்.


English Translation by Kirubakaran Pakkirisamy:


Blind Superiority
---------------------------
No surprise you know it after you see it 
But we feel it first and then we can see it 
Isn’t our understanding more deliberate ?

Unfortunately we cannot see the colors of the rainbow
But visual appeal  does not color our opinions 
Isn’t our opinions more unbiased ?

True we lack one of the five senses
But we go by the rest of the four 
Isn’t our perception more complete ?

We have eyes no sight
But our eyes are never green with envy
Isn’t our vision less clouded ?

Pity that you proudly proclaim love is blind
But that we fell in without seeing
Isn’t our love purer ? 

Youth is appealing to the eye
But our love is unaffected by the age
Isn’t our love more timeless ?

Stumped are you by the darkness that shrouds reality
But unaffected are we by the lack of light
Isn’t our handicaps much lesser ?

Different from reality is your dreams 
But we watch our dreams and reality in the same way
Isn’t our views more consistent ?

A sincere appeal  - dont look and jump to conclusions blindly
Attention is our shield, patience is our virtue and the cane our eyes

Visualize all our strengths in your minds’ eye and give us our respect


© Ravishankar Palanivelu, March 17, 2019, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

No comments:

Post a Comment