Monday, July 4, 2016

கார்மேகம்; Translated version in English: Rain Clouds

Photo credit: Ravishankar Palanivelu




















விழையாமலே பொங்கிய 
மழலையின் அழுகையாய் 
அழையாமலே தழைத்தது  
மழை மேகம்

திரண்டது மேகம் 
மிரண்டேன் நான் 
பகலிலேயே ஓரிரவாயென 
சகலமும் கலங்கியது 

வதக்கிய பயத்தை 
ஒதுக்கி வைத்தால் 
கார் மேகத்திலும் 
ஓர் ஆயிரமழகை  
பார்க்க இயலும்  

அடர்ந்த காடொன்று 
இடம்பெயர்ந்து வானில் 
படர்ந்து பாம்பாய் 
படம் எடுத்த்தது 

நீலவண்ணன் திருடியதால் 
பால்வெண்ணை மறைந்தது 
கடையாமலே திரண்டஇந்த  
கருப்பு வெண்ணை
நீலவானத்தையே மறைத்தது

வாரணத்தின் தோலிலுள்ள 
வர்ணத்தை எடுத்து 
விரைந்து நிமிடத்தில்
வரைந்த ஓவியமென்பதாலா
கலைத்த கோலமாய் 
நிலை குலைந்துள்ளது  

நீ தரப்போகும் 
நீர் தாரையென்ன.... 

பதறி ஓடியதால் 
சிதறிய வேர்வையா?

கரிய கூந்தலை 
விரித்து துவட்டியதால் 
தெறித்த துளிகளா?

நனைந்த பஞ்சுமேகங்களை  
பிணைந்து பின்னி    
பிழிந்த போது 
வழிந்த நீரா?

வறட்சிக்கு துணைபோன  
சூரியனை எதிர்த்து 
கருப்புக்கொடி காட்டி 
கிளர்ச்சி புரியும்  
புரட்சிமேகங்களின் கண்ணீரா?

இடியெனும் மேளத்தோடு 
மின்னலெனும் வாணவேடிக்கையோடு 
விண்ணலே நடந்த 
திருமணத்திற்கு வந்தோரை 
வரவேற்க தெளித்த 
பன்னீர் துளிகளா? 
  
கருப்பு ஓவியத்திற்கு 
உருக்கொடுக்க 
வர்ணம் அள்ளியப்பின்  
தெளித்ததால் வெளிவந்த 
தூரிகை தூரலா? 
வண்ணமின்றி அவைகளையும் 
வடிகட்டி அனுப்பியதுயார்?

என்ன நீராயினும் 
உன்னை முழுதாய் 
உணர நாங்கள் 
பொறுத்து கொள்ளவேணும் 
புரிந்து கொள்ளவேணும் 

நீ தரும் 
நீர் இல்லையேல் 
ஓர் உயிரினமும் 
உயிர் வாழாதே 
வேறு எதுவும் 
வேர் விடாதே

ஆழியில் சேர்ந்த 
மழை நீரெல்லாம் 
பாழாகாமல் மீண்டும் 
பூலோகம் திரும்ப 
காலகாலாமாய் நீதானே 
இயற்கை வடிகட்டியின் 
இன்றியமையாத பாகம்

தோற்றம் அச்சுறுத்தினாலும் 
ஆற்றும் பணி 
போற்ற கூடியதே 
சீற்றத்தின் கொடூரம் 
மாற்றத்தின் ஆதாரம்

English Translation by Kiru Pakkirisamy

Rain Clouds
-----------------
Like the unforced tears of a child
The innocent rain pours down wild

Like it was a nightfall during the day
The dark clouds set me trembling away

Like the relief after an abated fear
A patient eye sees beauty in the rain cloud later

Like the cobra prefers the dark jungle
The rain clouds take to the sky to mingle

The Blue Lord apparently stole the white butter
This unchurned black butter hid the blue sky better

Is this a rushed attempt to paint with the rainbow colors?
An anxious attempt at painting has lost all artistic favors

Were you afraid of the flood when you open up and burst?
Rushing, sweating and your perspiration quenches all thirst

Were you shaking off the wetness off your dark hair?
It is coming down as bright little rain drops here

Were you trying to dry the drenched white cloud?
Squeezing them, twisting them, it is all raining below good

Was the sun plotting a famine in vain?
And clouds protesting shed tears as rain

Drum beating thunder and lightning fireworks going astray
For whose marriage in heaven are these fragrant rain spray?
 
The skies are dark,
Did somebody try to spray rainbow colors on to it?
But why does it fall down as with those colors filtered out?

You might be mere drops of water
We need to know and understand you better
Without you, brother
No animal lives or no plant takes root ever

All that evaporated
Came back
Thanks for keeping the earth protected

Dark clouds are menacing
But your service pleasing
There’s reason for extreme
As you cause a change so supreme

© Ravishankar Palanivelu, July 4, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

No comments:

Post a Comment