உண்மை ஊமையான போது
உறவினர் ஊனிழந்த போது
உறவு அறுந்த போது
உள்ளம் உடைந்த போது
உறவு பிறந்த போது
உளமாற களிப்பேரிய போது
தாளாமலே தாங்காமலே
தானே தோன்றும் ஊற்று
தானே கண்ணீர்
ஆனாலும் உடல்
வலிக்கும் போதும்
வலிய வெளிவந்த
துளியும் நீ தானே
இடியுடன் கூடிய வானமாய்
துன்பமிக்க வேளையிலும்
ஆனந்தம் ததும்பும் போதும்
வாயும் கண்களும் சேர்ந்தே
வார்க்கும் மழையே கண்ணீர்
இருப்பினும் இரண்டு வித்தியாசங்கள்...
மகிழ்ச்சியின் போது வாய்க்கும்
சோகத்தின் போது கண்களுக்கும்
அதிக வேலை..
மகிழ்ச்சியின் போது அளவாகவும்
சோகத்தின் போது வெள்ளமாகவும்
வெளியேறும் கண்ணீர்..
சோகத்தை கரைத்ததால்
கரித்தது கண்ணீரென்றால்
ஆனந்த கண்ணீரோ
தேனாய் ஏன் இனிக்கவில்லை?
எண்ணங்களை மொழிபெயர்க்க
வார்த்தைகள் உண்டு
சோகமான, சுகமான
எண்ணப்பெருக்கை
விரைவாய் விவரிக்க
கண்ணீர் மட்டும் தான் உண்டு
இறுகிய மனம்
உருகியதால்
பெருகிய வெள்ளம் தானோ
கண்ணீர்?
இல்லை
இதயம் பொங்கிய போது
எழுந்த சோக நீராவியெல்லாம்
கண்களில் முட்டி
பொழிந்த மழை தானோ கண்ணீர்?
மனதில் தானே
எண்ணங்களை பிழிந்தேன்
கண்களில் எப்படி
நீர் தாரை?
தேறிய கருத்தை
அறிவு பேச
வார்த்தையால் தெரிவிக்க
வாய் தான் தேவைப்படுகிறது
வதைக்கும் சோகத்தை
இதயம் பேச
கண்ணீராய் வெளியிட
கண்களை தான் தேர்வு செய்கிறது
இலை மறை காயாய்
ஏமாற்றும் மாந்தரை
இனம் கண்டு கொள்ள
முதலிலேயே நம்ப வேண்டாம்
அவர் விடும்
முதலை கண்ணீரை
மடை திறந்த வெள்ளமாய்
தடையின்றி வந்த கண்ணீரை
துடைத்த விரல்
தோழமையின் ஆதாரம்
ஆமை கண்ணீரை
வீணாக்காமல் குடித்த பட்டாம்பூச்சியோ
இயற்கை சுழற்சியின்
அழகிய அத்தாட்சி
மற்ற ஜீவராசிகள் கண்களை
மசகிட மட்டுமே கண்ணீரை
மெடக்கிடும் (ஆமை உட்பட)
மனித இனம் தானே
மனதில் உள்ள சோகங்களை
கழுவி தள்ளவும்
கண்ணீரை பயன்படுத்துகிறது
Supporting information:
மசகிட = lubricate
ஆமை கண்ணீரை வீணாக்காமல் குடித்த பட்டாம்பூச்சி = http://video.nationalgeographic.com/video/160303-butterflies-drink-turtle-tears
© Ravishankar Palanivelu, July 18, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)
இந்தக் கவிதையும் கண்ணீர் வரவழைத்தது- ரகம் தெரியவில்லை
ReplyDelete'உறவினர்கள் ஊனிழந்தபோது'- ஜடம் உயிர்ப்பிக்கப்படுகிறது
மனதில் வடிகட்டப் பட்டவை கண்வழி எங்ஙனம்?- கேள்வி சப்த நாடிகளையும் சப்தமின்றி சபிக்கிறது
கண்ணீரின் ரிஷிமூலம் காண்பதில் வாய்க்குள்ள கடமை இதுவரை நிலவிய பல கூற்றுகளை நிர்மூலம் செய்கிறது
சோக நீராவி- உளம் மேவி வியாபிக்கிறது; மனதுக்குள் "முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ"- அந்தக் கவிராஜனுக்கு ஏற்ற யுவராஜன்
மனிதம் உயவுக்கு உயிர் கொடுத்து உயர்வு கொடுத்தக் கதையை இதைவிட செவ்வனே விளம்ப ஆளில்லை
முதலைக் கண்ணீரை முதலிலேயே நம்ப வேண்டாம் என தடுத்தாட்கொள்ளும் நா(லா)வகம் நம் முதலியார்வாளுக்கல்லாது வேறு யாருக்கு வரும்
அருமை; அற்புதம்; அளப்பரியது;
வாழ்க; வளர்க; வணக்கம்;
Thank you Jayasankar. It is definitely a key aspect of our evolution that we humans can bring tears as part of an emotional response. but as you say how can we do that cordless after striking a cord - a person separate from us died but how can our eyes shed tears? Same way, when some one else chokes up, how can we also cry? Another aspect of tears in humans is that we are now using the tear ducts to express something different than lots of animals which have tear ducts to clean up their eyes. I find it amazing that we have co-opted that feature for a completely novel thing.
DeleteYes, that "we" is so natural, yet different from other products of mother nature in many ways. This kind of evolution is nothing short of a quantum revolution in the series planned originally by it.
DeleteA very biological inspiration behind a very thoughtful poem. Great creative thought, especially in the below lines
ReplyDeleteஇதயம் பொங்கிய போது
எழுந்த சோக நீராவியெல்லாம்
கண்களில் முட்டி
பொழிந்த மழை தானோ கண்ணீர்?
Thank you Aishwarya. Biology (or science) is an intricate part of my thinking now and how lucky I am to not only to try to understand what we see around us and if I don't understand it, at least enjoy the beauty of it. The inspiration for the lines you quote came from my middle school geography lessons, which beautifully explained "windward" and "leeward" side of a mountain using Western Ghats as an example (same is the case if you see the great Northwest mountains in Washington state). The principle behind why one side gets rain and the other side does not is what I imagined to be happening behind our tears - rising from the boiling heart and getting cooled when they hit the eye mountains and then coming down as rain.
DeleteWelcome and creative connectivity between human emotions and nature's wonder.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteMama, awesome! You have really played with the words well.
ReplyDeleteCrying has more benefits and yes, it heal us to some extent.
Great to read your thoughts, keep writing!
Thank you Latchu for your feedback and encouragement.
DeleteRavi keep on writing in Tamil also in free time translate side by side in English there by young generation still enjoy by doing so new ideas can be created for next Topic.just try our younger generation will get immense benefit.when we read many times we also master the Equilibrium between English & Tamil
ReplyDeleteThanks Sekar; I am not good in English and will not be able to do a good job in translating it. I will also do a literal translation and hence will loose the charm. I will be lucky if some one who has a mastery in English language come forward to do it.
DeleteI still remember at young age you prepared speech and wanted to read out in the Assembly.But I gave idea give in Natural way without look & readout.By doing so you got claps Appreciated by all .
ReplyDeleteThanks Sekar for that guidance. That was my maiden attempt and hence was very nervous not wanting to humiliate myself. But your nudge and pointers certainly helped me.
Delete