Photo by Sudhagar Shanmugasigamani |
விழித்துப் பார்த்தேன்
புல்வெளி மேல்
பனித்துளி
இப்பொழுது தானே விடிந்தது
அதற்குள் வியர்வையா?
அழுதாயோ?
புற்களுக்கும் இலைகளுக்கும்
கண்களே இல்லை
கண்ணீர் மட்டும் பூத்தது எப்படி?
நீ அழுதது
சென்றுவிட்ட இரவுக்கா?
வந்து விட்ட பகலுக்கா?
சோகங்களை சிநேகிதகள்
இரகசியமாய் பகிர்ந்தபோது
இறக்கி வைத்த சுமை துளிகளா?
வீசிய காற்று மறைமுகமாய்
கசிந்த கண்ணீர் பதிவுகளா?
இத்தனை அழகு இங்கு
வாய்விட்டு அழ
வாய்ப்பே இல்லை
கண்டிப்பாய் நீ
கண்ணீரை இறைத்திருக்க மாட்டாய்
இலவச நீர் போர்வையா?
இலை மேல் படிந்த நீர் மேகமா?
நகராமல் உறையாமல்
சிகரமாய் எழுந்த
பெய்யாத குட்டி மழையா?
விடிந்த பிறகும்
வடியாத ஒரு துளி வெள்ளமா?
யார் ஊதி வந்த
உடையாத, வண்ணம்
அடையாத நீர்க் குமிழி நீ?
இரவு வானில் இருந்து விண்மீன்கள்
இலைகள் மேல் இடம் பெயர்ந்தனவோ?
புலப்பட்டுவிட்டது! புல்வெளி புரிந்த செயல்!!
எண்ணில்லா விண்மீன்களை
உன்னிப்பாய் பார்க்க
தன்னிகரில்லா தற்காலிக தொலைநோக்கியோடு
அண்ணாந்து பார்த்து விட்டு
அனாதையாய் விட்டு சென்றதை
என்னான்னு சொல்ல?
This poem also was published in One India Tamil website on June 7, 2017:
http://tamil.oneindia.com/art-culture/poems/reader-s-poem-jun-07-285210.html
-----------------
Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.
Beads of sweat on your face
Cannot be.. it is just daybreak
Tears ? but why
Missing the day that went by ?
Afraid of the new day ? maybe not
Must be the tears of the gentle breeze on your face
when it kissed you good bye
You are so beautful you dont deserve to cry
Are you hiding behind those tears
You cannot, they roll of like water drops on a leaf
Did that peristent rain leave a mark on you ?
They shine like stars on the sky on your face
They are not dew drops on grass
They are millions of temporary telescopes on my meadow
That are born everyday and die to watch that heaven above..
© Ravishankar Palanivelu, June 2, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)
No comments:
Post a Comment