Wednesday, November 8, 2017

வெள்ளம்

 வெள்ளம் (Flood)

ஏரியெல்லாம் மலை
ஏறி விட்டதால்,
வாய்க்கால்களுக்கெல்லாம் நாம்
வாக்கரிசி போட்டுவிட்டதால்,
குட்டைகளுக்கெல்லாம் துட்டுக்காக
குட்பை சொல்லிவிட்டதால்,
பூமிக்கு வந்த மழையை
சேமிக்க தவறிணோம்,
ஓட்டைப்பாத்திரத்தால் பிச்சையை
கோட்டை விட்டதுப்போல்.

தானாய் வந்த
தாணத்தை போய்
வீனாக்கிய சாணக்கியர்களே!
இனி மேல்
வாரிவழங்க வரவில்லை
கார்த்திகை மாத
கார் மேகம்,
காரித்துப்பவே வருகிறது.

மாதம் தோறும்
மும்மாரி பெய்த
போது எல்லாம்
எப்போதோ வெள்ளம்,
இப்போதோ
ஓரிரு மழையிலேயே
ஊரேயே உள்வாங்கும்
சரளமான வெள்ளம்

வீதி வாய்க்காலானது
விதியின் கொடுமையல்ல,
மதியில்லாமல் தண்ணீர்
மிதக்க வேண்டிய
குளங்களிலும் ஏரியிலும்
குடியிருப்பு கட்டியதால்,
வடிவாய் வீடுகட்டிவிட்டு
வடிகாலை வடிக்காததால்

இத்தனை படித்தும்
அத்தனையும் வீண்
பூராத்தையும் புரிந்து
ஆராயாமல் அறியாமல்
தோராயமாக ஏன்
தெருக்களை கட்டினீர்கள்?
எஞ்சினியர்கள் இருந்தும்
எஞ்சியது என்ன?

இருக்க பிழைக்க
இடம் வேண்டும்
இல்லை எனவில்லை,
அதற்காக
இனாமாக கிட்டியதால்
முன்னோசனை இல்லாமல்
தான்தோன்றி தனமாக
கட்டுப்பாடு இல்லாமல்
கட்டிடம் கட்டிவிடுவதா?

அன்று பேராசையால்
மதமையில் மிதந்தோம்,
இன்று நிராயுதபாணியாய்
வெள்ளத்தில் மிதந்தோம்...

நகரம் அமைத்தவர்கள்
நகர மறுத்தால்
நரகமே நிச்சயம்,
குளத்து குடியிருப்பிலிருந்து
வெளியேற மறுத்தால்
வெள்ளமே சாத்தியம்

தீவான சென்னைக்கு
தீர்வு என்ன?

வருணனின் கருனை
தவறாமல் வேண்டும்
மழை தண்ணீர்
பிழைப்புக்கு வேண்டும்
பெய்த மழையை
கொய்துக் கொள்வோம்,
வாய்காலிட்டு வடிய
வாய்ப்பு கொடுப்போம்,
வடியம் தண்ணீர்
முடியும் இடம்
குட்டை, ஏரி
குளம் என்றாக்குவோம்
முக்கியமாய் இம்மூன்றும்
மழை நீரின்
குடியிருப்பு, நம்முடையதல்ல
என்பதை என்றும்
எண்ணத்தில் கொள்வோம்
© Ravishankar Palanivelu, November 9, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.