Wednesday, June 29, 2016

சூரிய அஸ்தமனம்; Translated version in English: Deceiving Damsel

(Photo by Sadhana Ravishankar, on I-10, Palm Springs, CA, USA)
















களைத்துப்போய் மலை உச்சியில் 
இளைப்பாறும் ஒற்றை பயணி  

நாள் முழுக்க நடந்தாய் 
நாழிகை ஒன்றில் மடிந்தாய் 

விண்வெளிகளோடு நீ ஆடும் 
கண்ணாமூச்சி ஆட்டத்தின் ஆரம்பமிது 

நீராடுவதற்கு முன்னமே மஞ்சளை
பூராமுகமும் பூசியதேன் சூரியனே?

மலைத்துப் போனேன் எப்படி
மலையை முத்தமிட்டும் சிவக்காதிருந்தாய்?

வானுயர்ந்த மலை சிகரம்  
பானு இறங்கும் பாலமா

குன்றிலே மறைந்து எதிர்திசையிலே 
தோன்றும் நீ, மாயாவியா?

மலையுன்னை மறைப்பதால் ஓவ்வொரு  
மாலையிலும் ஒரு சூரியகிரகணம்

இது புரியாமல் நாங்களும் 
இரவென்று ஏமாந்து வருகிறோம் 

(பானு = synonym for sun)

----------------

Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.


Deceiving Damsel
-------------------------

You dont blush even while kissing the mountains
And rest your head on his shoulders hours later

You  go down in one direction and magically rise in the opposite
And you are angel who wears makeup before the ocean shower

You prance around the whole day and disappear promptly in the evening
And start your hide and seek with with the stars there after

You come down a high bridge daily
And thats the mountain peak you rest in the evening hour

You create a solar eclipse everyday hiding behind the mountains
And we believe that it is the night, you deceitful Sun Maid !!

© Ravishankar Palanivelu, June 29, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Tuesday, June 21, 2016

அகதிகள்

(In honor of World Refugee day, June 20, 2016)

இடம் பெயர்ந்த நாற்று
வேர் விட்டது, நாங்களோ
கண்ணீர் மட்டுமே விட்டோம்

இறைக்கு மட்டுமின்றி
இருக்கும் இடத்திற்கும் சேர்த்தே
பிச்சை கேட்டோம்

இழந்தோம்...
உறவுகள், நினைவுகள்
உரிமைகளை பறிகொடுத்த போதே
இறந்தோம்...
பல்லாயிரம் முறை
உயிருள்ள போதே
       
கைகளில் குழந்தையை சுமந்தோம்
மனதில் கடந்ததை சுமந்தோம்
கண்களில் முடிந்ததை சுமந்தோம்

பசித்துப்பார்
வயிறு மட்டும் சுருங்கும்
அகதியாகிப்பார்
வயிறும் இதயமும் சேர்ந்தே குறுகும்

அவமானத்தில் வெந்தே
சவமானோம்
காழ்ப்புணர்ச்சியால் வந்த கண்ணீரையும்
தாழ்ப்போட்டோம்

இயற்கை சீற்றத்தால் நாடு
இடம் பெயர்ந்தோர் குறைவு
செயற்கையாய் எய்திய போரால்
அகதியானோர் மிகவு

நீயாக விரும்பி சென்றால், நினைத்த போது
தாயகம் திரும்பி வரலாம்
வேறு வழியின்றி அகதியானால்
மறுபடியும் எப்பொழுது வீடு திரும்பலாம்?

சொந்த ஊரிலும், புதிதாய்
வந்த இடத்திலும்
எங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பவர்
நாங்கள் இல்லை

எச்சம் போல்
துச்சமாய் புதிய இடத்தில்
சந்திப்போரெல்லாம்
சந்தேகிக்கின்றனர்

இடம் கேட்பது
மடத்தை பிடிக்க அல்ல
பிடரியை பிடிப்பவர்
இடறி விழுந்த நாங்களா?
ஒதுங்க தான் இடம் கேட்டோம்
பதுங்க அல்ல

இருக்க இடம் கொடுங்கள்
அதற்கு முதல் உங்கள்
இதயத்தில் கருணை
இறங்க இடம் கொடுங்கள்

வாய்ப்பு எனும்
தாய்ப்பால் கொடுக்கும்
அம்மாவாய் இருங்கள்
ஆரம்பத்தில் மட்டும்
ஆருயிர் செதுக்கும்
பிரம்மாவாய் இருங்கள்

வேண்டாமே பெரும்கோபம்
வேண்டாமே வெறும் சாபம்
வேண்டாமே பரிதாபம்
வேண்டுவதெல்லாம் மனிதாபிமானம்

© Ravishankar Palanivelu, June 21, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Sunday, June 12, 2016

ஞாபகம்

Photo by Sudhagar Shanmugasigamani















I. ஞாபகம் என்பது யாது?

கூட்டில் இருந்து வெளியேறிய நாள் முதல் 
கூடவே இருக்கிறாய்,
கூடிகொண்டே போகிறாய்

தாயையும் விட 
தந்தையும் விட 
தமக்கையையும் விட 
தமையனையும் விட
தாரத்தையும் விட 
நீ தான் என்னோடு எப்பொழுதும் 
தீபமாய் எரிந்து கொண்டு இருக்கிறாய் 

நீ என் 
நீங்கா நிழல் 
நிகரற்ற நிழல் 
உள் நிழல்..
வெளிச்சம் இருந்தும் நடுநிசியில் 
வெளியே வீழாத நிழல் போன்ற
உள் நிழல்..
ஒளியின்றினும் உள்ளேயே 
ஒளிந்துகொண்டிருக்கும்
உள் நிழல்

உன் 
நிரந்தரத்தை 
நிறம் பிரிக்க 
விழைகிறேன் 

சிறு வயதில் நிகழ்ந்த 
சின்ன சின்ன சம்பவங்கள் கூட 
சிதையாமல் என்னுள் 
சித்திரமாய் எப்படி இருக்கிறாய்?

ஒருமுறை மட்டுமே நுகர்ந்த வாசனையென்றாலும் 
உரு குலையாமல் பதிந்தது எப்படி?

உலுக்கிய முதல் இருட்டு இப்பவும் எப்படி 
குலுக்கி எடுக்கிறது?

சுவை, ஸ்பரிசம், உறவு, காட்சி
பகை, வெறுப்பு, யாசிப்பு, தேவை 
எல்லாவற்றையும் பயின்று உணர்த்துவது எப்படி?

அதனினும் மேலாய் 
தேவையான போது, நேரிட்ட போது
முகிலை விலக்கி வந்த சூரியனாய் 
அகிலம் சேர்ந்த மழையாய் 
சகிப்பில்லாத  அன்னையின் அன்பாய் 
கேட்காமலே தோன்றுவது எப்படி?

II. ஞாபகம் எங்கே உள்ளது?

நீ என்னுள்ளே எங்கு இருக்கிறாய்?
ஆராயோனும், எப்படி இருப்பாய்?
வடிவம் பார்க்கத்தான் 
பிடிவாதமாய் இருக்கிறேன்

மூளையின் எந்த மூலையில் முகாமிட்டு உள்ளாய்?
துளையை துளைத்த காற்று இசையாவது போலா?
உளையின் அருகில் உலாவும் வெப்பம் போலா?
நாளங்களின் வரப்பில் மின்சாரமாகவா?

தற்செயலாய் உன்னை சந்திக்க நேர்ந்தால் 
பிற்காலத்திலும் பார்க்க உன்னை சேமிப்பது எப்படி?

ஞாபகத்தை 
ஞாபகம் கொள்வது எப்படி?

III. நான் இல்லாமல் நீ 

நான் இறக்கும் போது நீ என்னவாய்?
அதற்கும் முன் உன்னை முழுதாய் 
இறக்கி வைக்க வேண்டும் 

யோசித்து பார்த்தேன் 
ஞாபகங்களை பதிவு செய்ய ஆரமித்த போது தான் 
மனித குலம் பிறந்தது 
நாகரீகமும் பிறந்தது 

நினைவு நாள், திருமண நாள், பிறந்த நாள் 
வாக்கியம், சொல், எழுத்து 
புத்தகம், கட்டுரை, கவிதை 
நாட்குறிப்பு, நாடொளி, காணொளி,
அனைத்துமே உன்னை இறக்கி வைக்கும் பணிதானே?
அனைத்து ஞாபகங்களையும் இறக்கி வைக்கும் 
வலிமை பெற்றால் மனிதன் நிரந்தரமாவான் 

IV. நீ இல்லாமல் நான் 

நான் இருக்கும் போது 
நீ இறந்தால் 
நான் என்னாவேன்?
உயிருள்ள பிணமாவேன்

காலைகடன் முதல் கண்ணுறங்கும் வரை 
வேலைகள் அனைத்திற்கும் நீயே மூலம் 
இல்லையேல் ஆவேன் நான் நிர்மூலம் 

ஊணுக்கு ஆணிவேர் அணுக்கள் 
அணுக்களின் ஆணிவேர் இரசாயணம் 
ஞாபகம் இவ்விரண்டின் மேல்பரிமானம்

ஞாபகம் இல்லையேல் வாழ்கை இல்லை 
ஞாபகம் இருக்கட்டும் 

© Ravishankar Palanivelu, November 8, 2015, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Tuesday, June 7, 2016

வானவில்; Translated version in English: Rainbow

(Photo by Ravishankar Palanivelu, while driving
on I-10 between Phoenix and Tucson)















வாவில் 

விரிந்த விந்தையை விவரிக்க வரியில்லை 
வில்லிங்கே, அம்பையோ ஏகலவனையோ காணவில்லை 

நங்கையின் வளைவுகளில் நயந்து நலிவது போல் 
இங்கேயும் வளைந்த அழகில் தானே சரிந்தேன் 


ஒரு சூரியன்ஏழு வண்ணம்ஆனால் தூரிகை எங்கே?
தருவாயா எனக்குஇரவில் எழுப்பி காட்டுகிறேன்

நீர்த்திரை போட்டு எதையோ மறைத்தது முட்டாள் மேகம் 
ஒளிக்கதிரோ துளியையும் துளைத்து உன்னை வெளியிட்டதே 

வண்ணபாலம் வர்ணஜாலம் அழகு தான் 
ஆனாலும் நிமிர்ந்து நின்று இருந்தால் மதித்திருப்பேன் 

இப்போழுது தானே பிறந்தாய், அதற்குள் 
எப்படி வீழ்ந்தது உனக்கு கூன்?

கூனிலிருந்து நிமிரிந்ததால் மனித ஜாதி கண்டது பரிணாமம் 
காலகாலமாய் வளைந்தே நீ மரித்ததால் எஞ்சியது பரிதாபம் 

நிமிடமாய் மறைந்து போக போகும் 
நிரந்தரமற்ற வானவில்லிலும் ஓர் சேதி உண்டு 

சூரியனேயே எதிர்த்து நின்றன நீர்துளிகூட்டம் 
சேர்வதால் வரும் பலனை பார்த்தாயா?

---------------------------------------------------------------------------------------------------------


Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy

Rainbow

Down the horizon I see a beautiful bow
The arrow is missing  and the archer is lying low

I have seen quite a buxom beauties in my youth
Never have I fallen for a curve so smooth

A sun, seven colors and a magic brush
Had I one such brush a rainbow at night shall flourish

A cloud so silly trying to hide you with just vapor
A light that pierces a million drops to reveal you proper

A beautiful bridge and a colorful dance for all  
Never bow your head to any lord for you stand tall 

A day old youth hunched like an old man
Its a mystery to resolve if one really can

Evolution made the man stand upright
You stoop so low and never got on the curve quite

You live for a momentary minute
But teach us all a lesson so sweet

Nobody dare challenge the mighty sun

But even a water drop can if they are together a million

© Ravishankar Palanivelu, June 16, 2015, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Monday, June 6, 2016

இது ஒரு பொன் மாலை பொழுது; Translated version in English: The Golden Evening Sky

Photo of Tucson evening sky by Ravishankar Palanivelu on 5/31/2015
















ஒளிரும் ஓவியத்தை தீட்டி விட்டு
ஒளிந்த ஓவியன் யார்?

வானின் ஒரு பகுதியில் மட்டும்
வண்ணக் கிருக்கலிட்ட குழந்தை யார்?

அறியா மொழியில் விண்ணப்பமிட்டு
தெரியாமல் பதுங்கியது யார்?

சுற்றும் முற்றும் துருவிப் பார்த்தேன்
ஒற்றன் போல் ஒட்டுக் கேட்டேன்
கற்றவன் போல் அலசிப் பார்த்தேன்
சற்றும் தகவல் கிடைக்கவில்லை

மீண்டும் ஒரு முறை அன்னாந்துப் பார்த்தேன்
தென்ப்பட்டது எல்லாம் விண்மீன்கள் மட்டுமே
திறன்டுகின்ற வெண்ணை போல் உணர்ந்தேன்
மிரண்டு மறைந்து பார்க்கும் உடையவரின் கண்களோ?

சத்தமில்லா மொழியில் மொத்தமாய் கேட்டேன்
வித்திட்ட விண்மீன்களே விடை என்ன?

எத்தனை முறை கரையை முட்டினாலும்
தப்பிக்க முடியாத அலையை போல்
சென்று விட்ட சூரியனிக்கு தினமும்
செய்தி சொல்லி ஏன் ஏமாறுகிறாய்?

தீட்டிய ஓவியக் காவியம்
சரிந்த விட்ட சூரியனுக்கா? இல்லை
வரப்போகும் நிலவுக்கா? இல்லை
வெளிவரவுள்ள வெள்ளிக்கா?

வண்ணம் தெரிகறது, எண்ணம் புரியவில்லை
பிழம்பாய் தோன்றினாலும் குழப்பம் தெரிகிறதே
நிதானம் கொள், நிரந்தரமின்மை தெளிவானது
விவாதம் வேண்டாம், விவரமாய் சொல்கிறேன் கேள்:

விரையும் வேகம் போலவே நீடித்த
இரயில் சினேகம்...

பருவத்தில் மட்டுமே ததும்பி வழிந்த
உருவ அழகு...

நாழிகை இரண்டுக்குகிடையில் அவசரமாய்
அவிழ்ந்த மொட்டு...

காற்றையே சிறை இட்டதாய் கர்வம் கொண்ட
நீர்க் குமிழி...

தேன் கொய்ய மட்டுமே பூவோடு கொண்ட
வண்டின் காதல்...

பெரும் முயற்சியால் வந்த வெற்றியானாலும்
ஒரு பொழுதே நீடிக்கும் மகிழ்ச்சி...

எப்பொழுதும் இருக்கும் பிரபஞ்சத்தில்
ஒரு பொழுதே நீடிக்கும் மனித வாழ்க்கை...

இவற்றின் நிரந்தரமின்மையிலும்
நிரந்தரமான உண்மை ஒன்று உண்டு

கலையப்போகும் உன் கோலம் போல்
புலப்பபட்டது இன்று.

------------------------------------------------------------

Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.

Is that art so bright on the sky
A sleight of hand of a person so shy ?

Is that doodle above the horizon
A child’s work for no reason ?

Is that petition on the firmament
From a person who disappeared in a moment ?

I searched
I spied
I analyzed
Alas, no answers

Looked up the sky again
All I saw was stars in reign
Looks like a blob of butter churned
Or is it somebody wide eye and amazed

Posed a silent question to the responsible stars
What is the secret behind the evening light wars ?
 
Like the waves pushing against the shores in vain
Why do you send a plea to the sun again and again ?

Is that art an epitaph for the sun ?
No, is it a welcome poetry to the moon ?
Or is it a greeting for the Venus appearing soon ?

I  see the colors
Not the thought showers
It is bright
But do not understand it right
Stay calm, Nothing is permanent
Listen, no argument

Like the quickly made friendship on the train that ends with the journey

Like the beauty, that only in the youth glows

Like a bud that blossoms in a minute and falls

Like the arrogance of the bubble to have imprisoned the air that bursts

Like the short term love of the bee for the flower as the nectar ends

Like a moment of a ecstasy for the long hard work that never lasts

In this Universe so lasting and ever present
The human life is so evanescent

Like the twilight beauty, nothing lasts
That is the only truth that lasts

The golden evening sky - is a fleeting instance
But a lesson well learnt in an instant


© Ravishankar Palanivelu, 5/31/2015. Tucson, USA (ravipalanivelu@gmail.com)

பனித்துளி; Translated version in English: When a grass blade becomes a Galileo

Photo by Sudhagar Shanmugasigamani















விழித்துப் பார்த்தேன் 
புல்வெளி மேல் 
பனித்துளி 

இப்பொழுது தானே விடிந்தது 
அதற்குள் வியர்வையா? 

அழுதாயோ? 
புற்களுக்கும் இலைகளுக்கும் 
கண்களே இல்லை 
கண்ணீர் மட்டும் பூத்தது எப்படி? 

நீ அழுதது 
சென்றுவிட்ட இரவுக்கா? 
வந்து விட்ட பகலுக்கா? 

சோகங்களை சிநேகிதகள் 
இரகசியமாய் பகிர்ந்தபோது 
இறக்கி வைத்த சுமை துளிகளா? 

வீசிய காற்று மறைமுகமாய் 
கசிந்த கண்ணீர் பதிவுகளா? 

இத்தனை அழகு இங்கு 
வாய்விட்டு அழ 
வாய்ப்பே இல்லை 
கண்டிப்பாய் நீ 
கண்ணீரை இறைத்திருக்க மாட்டாய் 

இலவச நீர் போர்வையா? 
இலை மேல் படிந்த நீர் மேகமா? 

நகராமல் உறையாமல் 
சிகரமாய் எழுந்த 
பெய்யாத குட்டி மழையா? 

விடிந்த பிறகும் 
வடியாத ஒரு துளி வெள்ளமா? 

யார் ஊதி வந்த 
உடையாத, வண்ணம் 
அடையாத நீர்க் குமிழி நீ? 

இரவு வானில் இருந்து விண்மீன்கள் 
இலைகள் மேல் இடம் பெயர்ந்தனவோ? 

புலப்பட்டுவிட்டது! புல்வெளி புரிந்த செயல்!! 

எண்ணில்லா விண்மீன்களை 
உன்னிப்பாய் பார்க்க 
தன்னிகரில்லா தற்காலிக தொலைநோக்கியோடு 
அண்ணாந்து பார்த்து விட்டு 
அனாதையாய் விட்டு சென்றதை 
என்னான்னு சொல்ல?

This poem also was published in One India Tamil website on June 7, 2017:
http://tamil.oneindia.com/art-culture/poems/reader-s-poem-jun-07-285210.html

-----------------

Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.


Beads of sweat on your face
Cannot be.. it is just daybreak
Tears ? but why 
Missing the day that went by ?
Afraid of the new day ? maybe not
Must be the tears of the gentle breeze on your face
when it kissed you good bye
You are so beautful you dont deserve to cry
Are you hiding behind those tears
You cannot, they roll of like water drops on a leaf
Did that peristent rain leave a mark on you ?
They shine like stars on the sky on your face
They are not dew drops on grass
They are millions of temporary telescopes on my meadow 
That are born everyday and die to watch that heaven above..

© Ravishankar Palanivelu, June 2, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)