Tuesday, June 21, 2016

அகதிகள்

(In honor of World Refugee day, June 20, 2016)

இடம் பெயர்ந்த நாற்று
வேர் விட்டது, நாங்களோ
கண்ணீர் மட்டுமே விட்டோம்

இறைக்கு மட்டுமின்றி
இருக்கும் இடத்திற்கும் சேர்த்தே
பிச்சை கேட்டோம்

இழந்தோம்...
உறவுகள், நினைவுகள்
உரிமைகளை பறிகொடுத்த போதே
இறந்தோம்...
பல்லாயிரம் முறை
உயிருள்ள போதே
       
கைகளில் குழந்தையை சுமந்தோம்
மனதில் கடந்ததை சுமந்தோம்
கண்களில் முடிந்ததை சுமந்தோம்

பசித்துப்பார்
வயிறு மட்டும் சுருங்கும்
அகதியாகிப்பார்
வயிறும் இதயமும் சேர்ந்தே குறுகும்

அவமானத்தில் வெந்தே
சவமானோம்
காழ்ப்புணர்ச்சியால் வந்த கண்ணீரையும்
தாழ்ப்போட்டோம்

இயற்கை சீற்றத்தால் நாடு
இடம் பெயர்ந்தோர் குறைவு
செயற்கையாய் எய்திய போரால்
அகதியானோர் மிகவு

நீயாக விரும்பி சென்றால், நினைத்த போது
தாயகம் திரும்பி வரலாம்
வேறு வழியின்றி அகதியானால்
மறுபடியும் எப்பொழுது வீடு திரும்பலாம்?

சொந்த ஊரிலும், புதிதாய்
வந்த இடத்திலும்
எங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பவர்
நாங்கள் இல்லை

எச்சம் போல்
துச்சமாய் புதிய இடத்தில்
சந்திப்போரெல்லாம்
சந்தேகிக்கின்றனர்

இடம் கேட்பது
மடத்தை பிடிக்க அல்ல
பிடரியை பிடிப்பவர்
இடறி விழுந்த நாங்களா?
ஒதுங்க தான் இடம் கேட்டோம்
பதுங்க அல்ல

இருக்க இடம் கொடுங்கள்
அதற்கு முதல் உங்கள்
இதயத்தில் கருணை
இறங்க இடம் கொடுங்கள்

வாய்ப்பு எனும்
தாய்ப்பால் கொடுக்கும்
அம்மாவாய் இருங்கள்
ஆரம்பத்தில் மட்டும்
ஆருயிர் செதுக்கும்
பிரம்மாவாய் இருங்கள்

வேண்டாமே பெரும்கோபம்
வேண்டாமே வெறும் சாபம்
வேண்டாமே பரிதாபம்
வேண்டுவதெல்லாம் மனிதாபிமானம்

© Ravishankar Palanivelu, June 21, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

6 comments:

  1. very nice Ravi. entire world needs to wake up for this cause.

    ReplyDelete
  2. Thank you Ram. Outsized suspicion and lack of compassion is not good. Giving them a chance is all what one can do; as they say, pains from a head ache can only be understood when it happens to oneself.

    ReplyDelete
  3. You've captured the desperation of their situation. Evokes the same feeling the Book Roots by Alex Haley did.

    ReplyDelete
    Replies
    1. Thank you Bhavani. Desperation is one that encompasses nearly everything about them - it is what leads them to undertake risky escape strategies and also the courage to leave everything they have known behind and try to restart somewhere else. The survival instincts are strong and it makes us do things that we ourselves may not have realized that we are capable of.

      Delete
  4. Good caption of their feelings. Aaaruyir sedhukkum Brahma.... Naalla kaarpanai.... Keep it up

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for your comments. I appreciate it very much.

      Delete