Tuesday, April 10, 2018

பனிமழை; Translated version in English: The Perfect rain


மல்லிகை மொட்டுக்கள்
வெள்ளை மணலான
கொள்ளை அழகை
சொல்லி மாளாது,
புள்ளிகளே தானாய்
துள்ளி இறங்கி
கோலமான அதிசயத்தை
விளக்க இயலாது

தள்ளி நிற்பதை
தள்ளி போடு,
நெருப்பா இது 
அருகில் அமர்ந்திடு,
வெந்தா விடும் 
வந்து எடு

பனி மழையின்
தனித்துவம் என்ன?
உறைந்து போயினும்
குறைந்து போகவில்லை
மாறுபாடு இல்லையினும்
ஈடுபாடு குறையவில்லை

பனி துளியை
பண்ணிய உளியை
பார்க்க இயலாவிட்டாலும்
பணிந்து விட்டேன்,
அமைதிக்கு அத்தாட்சியாய்
வெள்ளைப் பூக்கள்
குவிந்ததற்கு தலை
குனிந்து விட்டேன்

மேலே இடமின்றி 
மேகங்கள் எல்லாம்
தரையில் இன்று
கரை ஏறியது

இலைகளை எல்லாம்
தொலைத்து விட்டு
மரங்கள் தானே
விதவை ஆயின,
பூமி ஏன்
பூண்டது வெள்ளாடை?

வரப் போகிறது
இளவேனில் காலம்
இல்லை எனவில்லை
இப்பொழுதே அதை
வரவேற்க யார்
வெள்ளையடித்து வைத்தது?

வெள்ளை மகரந்தங்களை
அள்ளி வந்து
பூமிப் பூவில்
மகரந்தச் சேர்க்கை
மகத்துவத்தை செய்த
வண்டுக்களை கொஞ்சம்
கண்டுப் பிடியுங்கள்,
தேனீக்கள் தென்பட்டால்
தேடுகிறேனென்று தெரிவியுங்கள் 

குழந்தையின் உள்ளங்கை,
உழவரின் உழைப்பு,
தன்னலமற்ற தாய்மை,
கரம் கறக்காத
கன்று மட்டும்
பசிக்கு பருகிய 
பசும் பால்,
இத்தனை இருந்தும்
உன் தூய்மைக்கு
உண்மையிலேயே உள்ளதா 
உகந்த உவமை?

மழையிலும் ஒரு
பிழை உண்டு;
நனைப்பதால் தெறிப்பதால் 
அனைவரும் ஒதுங்குகிறோம்
ஆனால் நீயோ
மெதுவான மழையாக
ஏதுவாய் இறங்கியதால்
இதமாக இருக்கிறாய்,
குளிருக்காக பூமியின்
குடையான மரங்களில்
வலியவே வந்தாலும்
வலிக்காமல்  வடித்ததால்
பதமாக தெரிகிறாய்.

English Translation by Kirubakaran Pakkirisamy

The Perfect Rain
----------------------

White cherry blossoms on ground
Many a majestic little white mound
White dots like in a puzzle
Turns itself into a painting with no tussle

No need to maintain that distance
Looks like white hot fire in an instance
But it is not, grab a seat and touch it
It is soft and cool, come down and sit

Even when frozen to death
Comes back to life in stealth
Thats the beauty of snow
It puts on a great white show

Who sculpted the snow flake grand
In respect before the maker I stand
White flowers herald peace
I bow my head before the soft seas

Gliding clouds seem to have run out of space in the sky
They have touched down on land without being shy

Why does the Earth don the doctors white suit over
May be to fix the trees that lost their leaves in the Fall fever

Spring is just  around the corner quite
Who painted it all white to welcome right

I search for the bees that brought the white pollen
To cover the flower of an Earth well swollen
If such bees do exist, let them know
I want to know the secret of the snow


The soft white of a baby’s palm
The hard work of the peasant in the farm
The cows milk for the calf with love so warm
All these vie in purity for your snow white charm

Rain is so imperfect
Its uncomfortably like sweat
You are a gentle rain
That does not need to drain
You cover the trees gently
You embrace the land completely
You are the heaven sent water
To quench our thirst with solid matter

Video recording of snowfall in NJ on March 18, 2018 by Sudhagar Shanmugasigamani.

© Ravishankar Palanivelu, April 10, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Monday, April 2, 2018

பள்ளிப்பருவம்


பள்ளிப்பருவத்தின் மேலேன்
கொள்ளை ஆசை?

பள்ளிப்பருவம்,
உருகாத பனி
அழுகாத கனி
அடங்காத அக்னி
காயாத மருதாணி
அதுபோல வருமாஇனி?

பள்ளிப்பருவம்,
ஓயாத அலை
குலையாத சிலை
பொங்காத உலை
உடையாத குவளை
ஈடு இணை
இதற்கு இல்லை!

பள்ளிப்பருவம்,
இறக்கும் வரைக்கும்
இருக்கும் இறுக்கம்
இறந்த பின்பே
ரிக்கும் ஞாபகம்

கரிசல் காட்டில்
கரிசன மழையால்
தரித்த பூவாய்,
பள்ளிப் பருவத்தை
நினைத்த போதெல்லாம்
தானாக தோன்றின
ஞாபக மலர்கள்

கடலை கூட
கடந்துப் போயினும்
கடந்தவை எங்களில்
மடியவே இல்லை,
கடைந்த வெண்ணையாய்
தடையின்றி தோன்றியது
தெளிந்த முத்தாய்
வெளியே வந்தது

பள்ளிப் பருவம்
துல்லியமாய் நின்றதும்
திரும்பிப் பார்த்தபோது
விரும்பியே விட்டதும்
எதனால்?
முதல் மழையால்
மட்டுமே வரும்
மண் வாசணை;
அதுப் போல
அநுபவங்கள் அனைத்திற்கும்
பிள்ளையார் சுழியிட்டது
பள்ளிப்பருவம் என்பதால்!

© Ravishankar Palanivelu, April 2, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Sunday, March 4, 2018

விளிம்பு; Translated version in English: On the Edge of Enlightenment










விடியல் ஓர் விளிம்பு,
அது
இரவின் அடக்கம்
பகலின் தொடக்கம்

பௌர்ணமி ஓர் விளிம்பு,
அதன்
வளர்ச்சியின் இறுதியில்
தேய்மானம் உறுதி

மேகம் ஓர் விளிம்பு,
அரும்பியது
வெந்திட்ட கடலுக்கும்
வந்துவிடும் மழைக்கிடையில்

அலை ஓர் விளிம்பு,
அது
மணற்கரைக்கு முன்பே
கடலில் நீர்க்கரை

நீர்க்குமிழி ஓர் விளிம்பு,
அங்கு
சிறையான காற்றுக்கு
விரைவில் விடுதலை

இசை ஓர் விளிம்பு,
அது
மௌனத்திற்கு பின்
வார்த்தைக்கு முன்

வாசல் ஓர் விளிம்பு,
அதன்
உள்ளே விலாசம்
வெளியே விசாலம்

நாணம் ஓர் விளிம்பு,
அங்கு
சபலத்தின் பெருக்கை
நாகரீகம் அணைக்கட்டும் 

துருதுருப்பு ஓர் விளிம்பு,
அமர்ந்திருக்கும்
அணலான அண்ணத்திற்கும்
அடங்காத பசிக்கிடையில்

அழுகை ஓர் விளிம்பு,
அத்தாட்சி
முயற்சி நின்றது
தோல்வி வென்றது

கண்ணீர், முத்தம், புன்னகை 
அனைத்துமே ஓர் விளிம்பு,
அவை
அளவில்லா உணர்வுகளின்
வார்த்தையில்லா பிள்ளையார்சுழிகள்

பாகுபாடு ஓர் விளிம்பு,
அதனால்
வெறுப்பு கரையேறியது
தீண்டாமையெனும் கறையானது 

தூது ஓர் விளிம்பு,
அது
போரை போக்க
அமைதி அமைய

தலைகுளியல் ஓர் விளிம்பு,
அங்கு
குழுமிய குழப்பம்
எழும் யோசனையாய்

மன்னிப்பு ஓர் விளிம்பு,
அப்பொழுது
தவறை ஏற்க
தற்கொலையாகும் தற்பெருமை

மரணம் ஓர் விளிம்பு,
அதனால்
நிகழ்வுகள் நிற்கும்
நினைவுகளில் மட்டும்

விளிம்பிலும் விளைச்சலுண்டு
விளம்பிட விழைகிறேன்:
மலையோ மடுவோ
கடலோ விண்வெளியோ
வாயடைய வைக்கும்
வாழ்க்கை தருணமோ
விளிம்புக்கு செல்லும்
எல்லா மனிதனுக்கும்
தானாய் தவறாமல்
ஞானம் வரும்.


English Translation by Kirubakaran Pakkirisamy

On the Edge of Enlightenment
------------------------------------------

Dawn is on the edge 
On the edge of 
Last night’s death
And this morn’s birth

The New Moon is on the edge
On the edge of
Its maximum waxing
And the start of it’s waning

The cloud is on the edge
One the edge of
The ocean boiling over
And coming down as shower

The waves are on the edge
One the edge of
The seas content
And the sandy beach’s extent

The beautiful bubble is on the edge
One the edge of
The glassy prison wall
And the air inside it all

The doorstep is on the step
One the edge of
The cozy indoors
And the vast outdoors

The coy smile of hers is on the edge
On the edge of
The uncontrollable desire
And the needed decent behavior

That cry is on the edge
On the edge of
Beaten effort
And the victory lost

That kiss or cry is on the edge
On the edge of
Uncontrollable emotions
And the beginning of new sensations

Discrimination is on the edge
On the edge of
Hate’s defeat
And slavery’s sealed fate

Diplomacy is on the edge
On the edge of
The war’s defeat
And Peace’s new date

The refreshing bath shower is on the edge
On the edge of
The dissolving last night’s confusion
And the new morning resolution
The apology is on the edge
On the edge of
Your ego’s suicide
For the wrongs that preceded


There’s light on the edge
Whether on the end of the mountain
Or the boundary of the ocean
Whether its a life’s challenge
Or death near the range
Whoever pushes themselves to the edge
There is light and enlightenment ...that’s life’s pledge


Image of the cliff shared from https://pixabay.com without violating copyrights rules as per CC0 Creative Commons usage guidelines (https://pixabay.com/en/service/terms/#usage).

© Ravishankar Palanivelu, March 4, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Saturday, February 10, 2018

மரணம்; Translated version in English: The Endless Sleep


நிரந்தர நித்திரை
கடைசி யாத்திரை
தொடங்கும் கொடூர 
தருணம், மரணம்

மரணம், நம்
வாழ்க்கையின் 
கடைசி இலக்கு,
ஏனோஇல்லை 
இதற்கு விதிவிலக்கு

தீர்மானமாய் கூறலாம்
தீர்க்க இயலாத
தீர்வே இல்லாத 
பிரச்சனை, மரணம்

கற்றதை வைத்து
பற்றுதலை கொண்டு
கொள்ளி இடுவதை
தள்ளிப் போடலாம்,
வெல்ல முடியாது

தவிர்க்கவே 
முடியாதது தான்
இறப்பு,
இருப்பினும்
தவிக்காமல் இருக்க
முடியவில்லையே

அவிழ்ந்துவிட்ட மொட்டு
விழுந்துவிட்ட அருவி
விடிந்துவிட்ட விடியல்
படிந்துவிட்ட பனி
ஆகியவைப்போல
மடிந்துவிட்ட உயிர்
முடிந்துவிட்ட விசயம்
விரும்பியே வியாப்பித்தாலும்
திரும்ப கிடைக்காது

இடைவிடாது துடிக்கும்
வேலையிலிருந்து இதயம்
ஓய்வு பெறும்
வேளை, மரணம்

ஒரே ஒரு
முறை மட்டும்
தன் பணியில்
தவறிய இதயத்தைத்தான்
'தவறிவிட்டார்' என்கிறோமோ?

துடிக்காத இதயத்திற்காக
துடிதுடித்து போனோமே
இரவலாகவாது துடிக்க
அவலத்திலும் ஆவலானோமே

பிறந்த போது
பிறரிடம் கேட்டு
பெறவே
நாம் மட்டும்
அழுகிறோம்,
இறந்த போதோ
பிரிந்து சென்றவர்க்கு
கேட்காது என்றாலும்
மற்றவர் யாவரும்
அழுகிறோம்

இறந்த பின்னர்
சென்றவரைப் பற்றி
செம்மையானதை எல்லாம்
சொல்லுகின்ற நாம்,
உள்ள போது
உரியவரிடமே ஏனதை
உரைக்க மறுக்கிறோம்?
உரைக்க மறக்கிறோம்?
உரைப்பதை குறைக்கிறோம்?

கடைசியாக பிரியா
விடைக் கொடுப்பினும்
விடை மட்டும்
கிடைக்காத கேள்வி
மரணம் என்று
பதறாதே, ஏனெனில் 
பதில், எய்தும் 
முன்னுள்ள வாழ்க்கையில்
புதைந்து உள்ளது

சொந்தம் பந்தம்
சொத்து சுகம்
கற்ற வித்தை
பெற்ற சிந்தனை
எதையும் உன்னால்
சிதைக்குப் பின்னால்
கூடவே உன்னோடு
கொணரவும் இயலாது
உணரவும் முடியாது
மாளப்போவதால் இவைகளை
ஆளவும் ஆகாது

மரணம் என்றாவது
வரும் என்றுணரும்
வரம் மனிதனுக்குண்டு,
எனவே நீயும் 
இறப்பின் கொடுமையை 
இருக்கும் பொழுதே
நிவர்த்தி செய்
மக்கத்தான் போகிறோம் மக்கு
துக்கத்தை துரத்து,
அச்சதை வெந்தே தீரும்
அச்சத்தை அகற்று.

கள்ள தனத்தை
கொல்லி போடு,
கோபம் வேற்றுமையை
அடக்கம் இடு,
காழ்ப்புணர்ச்சி, பகையை
காவு கொடு,
சாபம், கேடுகளை
சாக விடு

அன்பை மட்டும்
அள்ளிக் கொடு,
கற்றதை எல்லாம்
சொல்லிக் கொடு,
முடிந்ததை முயன்று
முடித்து விடு,
செல்வத்தை அளவாகவும்
ஞாபங்களை அதிகமாகவும்
சேர்த்து விடு,
மற்றவை யாவையும்
பகிர்ந்து கொடு,
குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும்
பணத்தை விட
நேரத்தை செலவிடு,
இயற்கையைப் பார்த்து
வியந்து விடு
மீதமேதும் வைக்காமல் மட்டும்
வாழ்ந்து விடு.

---------------
English Translation by Kirubakaran Pakkirisamy

The endless sleep 
A pilgrimage with no return
A wakeup you cannot earn
Death starts these games
No exception to any names


It is life’s conclusion
Nobody gets an exception
An old issue with no resolution
Everybody fails in this mission
Knowledge can delay
Money can keep it at bay
Putting fire to the pyre
Will always come to transpire


It is the inevitable
Fretting over it still unavoidable -
A flower that has blossomed
A waterfall that has flowed
A snow that has fallen
A life stopped sudden
All beautiful things come to an end
Neither will nor desire can turn back this trend


The heart beats with no pause
And when it skips  death is the cause
You clamor for a better heart to borrow
There is no resolution to this sorrow


A newborn cries for attention
The bereaved cry with no intention
For the dead we are generous with eulogy
When they are alive our appreciation is stingy
So scanty is our love
Warmth hidden in a glove


Death is a farewell forced
A question, always unanswered
Friends or loved ones will not join this journey
Your wealth, wisdom or skills cannot accompany
Do not fret, fuss or be in pain
It is all in vain


You are wise to realize death is inevitable
When you are alive realize sorrow is avoidable
You are going to turn into dust
Understand that just
Be fearless, Be happy


Put your dishonesty to the fire
Send bias and hatred to the pyre
Let jealousy and enmity be sacrificed
Bid ill will and wrongdoing to the death bed
Be honest, Be happy


Love a lot
Teach what you were taught
Finish what you are capable
Save wealth that is equitable
And amass memories sizeable
Be generous, Be happy


Share everything else with family and friends
More than money spending time makes sense
Wonder at the beauty of nature
Live a full life  to a rapture
Be alive, Be happy
© Ravishankar Palanivelu, February 9, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Thursday, January 18, 2018

எதிர்ப்பார்ப்பு

உன்னை
பார்க்கப் போகும்
எதிர்ப்பார்ப்பில் உள்ள 
புதிர் புரியவில்லை;
இரவு முடிந்து 
வரத்தான் போகும்
விடியலுக்கு போய்
அவசரப்பட வேண்டிய 
அவசியமும் அறியவில்லை

உறைக்கும் என
தெரிந்த பின்னும்
மீளாத ஆசை
மிளகாய் மேல்
உள்ளதுப் போல,
வலிக்கும் எனிலும்
வலிய உனக்காக
காத்திருப்பது பிடிக்கும்

உன் வரவிற்காக 
உறைந்து இருந்ததை
'காத்து' இருந்தேன் 
என்று சொன்ன
ஒன்றும் தெரியாதவன் யார்?
மெய் மட்டும் 
ஓய்ந்திருந்த போதும்
நில்லாத உன்
நினைவலைகள் 
பறந்து விரைந்ததாலா?

உன்
முகத்தை பார்க்கும் ஆவலில் 
நகத்தையெல்லாம் இழந்தேன்,
அவதியில் தனியே
அகதியாய் பரிதவித்தேன்,
மரத்தின் கீழே 
மரமாகி 
வேர்வை வார்த்து
வேர் வைத்தேன்

கடல் சென்ற
கணவன் வரவுக்காக
கரையிலேயே 
கரைந்த
கன்னிகைப் போல்,
பள்ளி முடிந்த பின்
பெற்றோர் வரவுக்காக
வீற்றிருக்கும் பிள்ளையைப் போல்,
வந்து விடமாட்டாயோயென
வெந்து கொண்டிருக்கிறேன்

கால் கடுக்க நின்றேன்
கை விட்டு விடாதே,
மலர் விரிந்தாயிற்று
வண்டாய் வர மறந்திடாதே

அருகே வந்த பின்
அழகே உன்னை 
பார்ப்பதை விட
வரும் போதே
தரிசனம் காண 
விழைந்தேன், 
எனவே என்
விழிகளை நீ வரும்
வழியிலேயே 
கழட்டி விட்டு விட்டேன்,
விழிப்பாய் நடந்து வா

உனக்காக காத்த போதோ
பேச வேண்டியதை
யோசித்தேன்,
மௌனமாயிருந்தேன்;
உன்னை பாத்த போதோ
பேச முடியாமல்
ரசித்தேன்,
மௌனமாயிருந்தேன்

உனக்காக காத்த போதோ
கடிகார முட்கள் இரண்டையும்
சுழட்டி விடவே துடித்தேன்
ஆனால்,
உன்னை பாத்த போதோ
கடிகார முட்கள் இரண்டையும்
கழட்டி விடவே துடித்தேன்

மலையில் ஏறி
மலைத்த பின்,
அலுக்காமல் உழைத்து
இலக்கை எட்டியபின், 
வேண்டி விரும்பிய
பண்டிகை வந்த பின்,
இதற்கா ஆசைப்பட்டோமென
குதர்க்கமாய் தோன்றும்,
காத்திருந்து உன்னை
காண்பது மட்டும்
கண்டிப்பாய் விதிவிலக்கு 

© Ravishankar Palanivelu, January 17, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Monday, December 18, 2017

பிச்சை



கல்லறைக்கும் எனக்கும்
இடையில் நின்ற
சிலவற்றில் இந்த
சில்லறையும் ஒன்று..
கைமாறும் காசுக்கு
என்ன
கைமாறு செய்யப்போகிறோம்?
சதையில் வந்து சேர்ந்தால்
சத்தம் வராது என
கையில் வாங்காமல்
பாத்திரத்தில் வாங்கி
வீழ்ந்த காசையும்
தாழ்மையான நன்றி
சொல்ல வைத்தோம்
மானம் இழந்து தான்
தானம் கேட்கிறோம்,
தந்த காசால்
உயிர் போன பின்னும்
வயிர்மட்டும் வாழ்கின்றது
இல்லாமையால் வந்த
இயலாமையைக் கண்டு
வேண்டுமானால்
இதயம் இருகி விடுங்கள்,
ஆனால்
இயலாமையால் வந்த
இல்லாமையை கண்டு
இதயம் இளகி விடுங்கள்.

© Ravishankar Palanivelu, December 17, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section. This was first posted in the FB group "Vaanga Pesalam" which solicited poems for the photo on the top.