Monday, April 2, 2018

பள்ளிப்பருவம்


பள்ளிப்பருவத்தின் மேலேன்
கொள்ளை ஆசை?

பள்ளிப்பருவம்,
உருகாத பனி
அழுகாத கனி
அடங்காத அக்னி
காயாத மருதாணி
அதுபோல வருமாஇனி?

பள்ளிப்பருவம்,
ஓயாத அலை
குலையாத சிலை
பொங்காத உலை
உடையாத குவளை
ஈடு இணை
இதற்கு இல்லை!

பள்ளிப்பருவம்,
இறக்கும் வரைக்கும்
இருக்கும் இறுக்கம்
இறந்த பின்பே
ரிக்கும் ஞாபகம்

கரிசல் காட்டில்
கரிசன மழையால்
தரித்த பூவாய்,
பள்ளிப் பருவத்தை
நினைத்த போதெல்லாம்
தானாக தோன்றின
ஞாபக மலர்கள்

கடலை கூட
கடந்துப் போயினும்
கடந்தவை எங்களில்
மடியவே இல்லை,
கடைந்த வெண்ணையாய்
தடையின்றி தோன்றியது
தெளிந்த முத்தாய்
வெளியே வந்தது

பள்ளிப் பருவம்
துல்லியமாய் நின்றதும்
திரும்பிப் பார்த்தபோது
விரும்பியே விட்டதும்
எதனால்?
முதல் மழையால்
மட்டுமே வரும்
மண் வாசணை;
அதுப் போல
அநுபவங்கள் அனைத்திற்கும்
பிள்ளையார் சுழியிட்டது
பள்ளிப்பருவம் என்பதால்!

© Ravishankar Palanivelu, April 2, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

No comments:

Post a Comment