Tuesday, April 17, 2018

உன்னத வாழ்க்கை

கண்ணில்  தெரிவது
அம்பா?
அன்பா?

நெஞ்சில் வருவது
நெருப்பா?
நெருக்கமா?

யாசித்தவர்க்கு தருவது
உதாசீனமா?
உதவியா?

அடுத்தவரின் நல்லதை
சுருட்டினீர்களா?
சுட்டிக்காட்டினீர்களா?

நல்ல யோசனைகளை
பதுக்கினாயா?
பகிர்ந்தாயா?

கசிந்த கண்ணீரை
தொடுத்தாயா?
துடைத்தாயா?

விடா முயற்சிகள்
கருகியதா?
கருவானதா?

நன்றி சொல்ல
மறந்தாயா?
முனைந்தாயா?

சரித்திரத்தின் பாடங்களை
அலட்டசியப்படுத்தினாயா?
அசைப்போட்டாயா?

இயற்கையின் அழகு
ஒன்றுமில்லாததா?
ஒப்பில்லாததா?

சுற்றுபுறச் சூழலை
காயப்படுத்தினாயா?
காப்பாற்றினாயா?

அடுக்காத அநீதிகளை
இழைத்தாயா?
இழித்தாயா?

வேற்றாரிடம் கொண்டது
அந்நியமா?
அன்யோன்யமா?

நம்மையும் மிஞ்சியவர்கள்
அற்பமா?
அற்புதமா?

வேரறுக்கும் வேற்றுமையை
கொண்டாயா?
கொன்றாயா?

பிறரின் பாராட்டுக்களை
குறைத்தாயா?
குவித்தாயா?

தீங்கு செய்தவர்களை
மன்றாடினாயா?
மன்னித்தாயா?

புறம் பேசுவதை
நிகழ்த்தினாயா?
நிறுத்தினாயா?

உன்னத வாழ்க்கை
சிக்கலா?
சுலபமா?

மேலோங்க மேலுள்ள
இரண்டாவதிலேயே
முதலீடுயிடு!


© Ravishankar Palanivelu, April 17, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

2 comments:

  1. Very nice. Food for introspection. It’s clear that no matter what we do, at every step we make a conscious choice. I love the bit about gossip

    ReplyDelete
  2. Thanks k you Bhavani. I appreciate your feedback and it is like a shot in the arm. I enjoyed writing about it, as I was recounting how not to react in certain tempting situations. How there is a choice even in those situations made me then think about other situations. Thank you again.

    ReplyDelete